குமரிக்கண்டம்
குமரிக்கண்டம் என்ற பெயரை கேட்டதும் பலருக்கு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி நினைவுக்கு வரும்.ஆனால் குமரிக்கண்டம் என்பதுவொரு கண்டமாகும். தமிழர்களின் தாயகமும் அதுதான்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் ஏற்பட்ட இரு கடற்கோள்களால் ஆழிவுடற்றது. இன்றைக்கு அந்த மாபெரும் கண்டம் இந்துமஹா சமுத்திரத்திற்குள் அமைதியாக மூழ்கி கிடக்கிறது.அழிந்து போன பாண்டிய மன்னர்களின் நாடும் அதுதான். குமரிக்கண்டம் பற்றி பல பண்டய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அந்த கண்டத்தில் குமரி ஆறு,பஹ்றுளி ஆறு,பெரு ஆறு மற்றும் கண்ணி ஆறு ஆகிய ஆறுகல் ஓடிக்கொண்டிருந்தன.அடியார்குனாளர் என்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் அதை விளக்கியிருக்கிறார்.இந்த கண்டத்தில் மொத்தம் ஏழு நாடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஏழு உட்பிரிவுகளை கொண்டிருந்தன. அந்த ஏழு நாடுகளுக்கும் சேர்த்து தென் மதுரை தலை நகரமாக விளங்கியது.அந்த நாடுகள் கீழ்கண்டவையாகும்.
1.ஏழுதேங்காய் நாடு,
2.ஏழுமதுரை நாடு,
3.ஏழுமுன்பாலை நாடு,
4.ஏழுபின்பாலை நாடு,
5.ஏழுகுன்ற நாடு,
6.ஏழுகுனக்கரை நாடு,
7.ஏழுகுறும்பனை நாடு என்பனவாகும்.
இவை ஒவ்வொன்றும் ஏழு உட்பிறிவுகளை கொண்டிருந்தன.ஆக மொத்தமாக 49 மாகானங்களாகும்.
No comments:
Post a Comment