Courtesy:www.warwithoutwitness.com

திருக்குறள் உங்கள் மொழியில் (Thirukural in Your Language)

Wednesday 31 August 2011

மரணதண்டனை ஏன் கூடாது?






மரணதண்டனை ஏன் கூடாது?
கடந்த சில நாட்களாக இனையதளங்களில் சிலர் மரணதண்டனையை ரத்து செய்தால் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும் என்றும் அனைத்து மரணதண்டனைகளையும் நிறுத்த வேண்டியிருக்கும் என்றும்அதனால் முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அவர்களுக்கு சில விளக்கங்களை தரவேண்டியிருக்கிறது.
=> முதலில்,மரணம் ஒரு தண்டனையா? மரணம் ஒரு தண்டனை என்றால் பிறகு நாட்டில் ஏன் இத்தனை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த உலகில் மரணத்தை விட கொடிய பிரச்சனைகளை சந்திக்கிறோம்.இதை விட மரணமே பரவாயில்லை என்று நினைப்பதால் தானே தற்கொலை செய்து கொள்கின்றனர்.அப்படி இருக்க மரணம் எப்படி தண்டனையாகும்.
=> இரண்டாவது,ஒரு கொலைக்குற்றம் செய்தவனுக்கு மரணதண்டனை என்றால் அதுவும் ஒரு கொலைதானே.அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாள் குறித்து செய்யப்படும் ஒரு திட்டமிட்ட கொலையாகும்.அதாவது குடிமக்கள் கொலை செய்தால் தவறு.அதையே அரசு செய்தால் தவறில்லை என்று தானே அர்த்தம்.அப்புறம் அரசாங்கத்திற்கும் கொலைகாரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நாம் மரணதண்டனை தான் கூடாது என்று சொல்கிறோமே தவிர தண்டனையே கூடாது என்று சொல்லவில்லையே! அதற்கு பதிலாக வேறு வித்தியாசமான தண்டனைகள் தரலாமே.உதாரனத்துக்கு குற்றமிழைத்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை அரசாங்கமே ஏலம் விட்டு அதனால் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கலாமே.இதை சிறை தன்டனையோடு சேர்த்துக்கொள்ளலாமே.இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் ஒரு நிவாரனம் கிடைக்குமே!
அதனால் தான் சொல்கிறோம் மரணதண்டனை கூடாது என்று.ஆனால் சில விஷமிகள் நாம் தன்டனையே கூடாது என்று சொல்லவதைபோல ஒரு தவறான கருத்துக்களை இனையதளங்களில் பரப்பிவருகின்றனர்.அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டுமே என்பதற்க்காகத்தான் இந்த விளக்கம்.

முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விவகாரம்:
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய இந்த மூவரும் நேரடியாக கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அல்ல.நேரடியாக கொலையில் சம்மந்தப்படாதவருக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது. இவற்றயெல்லாம் தான்டிய பல விடயங்கள் உள்ளது.
ராஜீவ்காந்தியை கொலை செய்ய பயன்படுத்தியதாக சொல்லப்படும் பெல்ட் வெடிகுன்டை செய்தவனை இன்னும் சி.பி. கன்டுபிடிக்கவில்லை. ஒருவேளை நாளை கன்டுபிடிக்கப்பட்டால் அப்போது இந்த மூவரில் ஒருவரை சாட்சியாக கோர்ட்டில் நிறுத்தவேண்டுமே.அப்போது செத்தவனை எழுப்பிக்கொன்டு வந்தா சாட்சி சொல்ல வைப்பார்கள். அப்படியிருக்க அவசர அவசரமாக தூக்கில் போடுகிறார்கள் என்றால் எதையோ மறைக்கிறார்கள்,யாரையோ காப்பாற்ற முயல்கிறார்கள் என்றுதானே அர்த்தம் கொள்ளவேன்டியிருக்கிறது.இதற்கு இன்னமும் அரசு ஒரு சரியான விளககத்தை கொடுக்கவில்லையே.
இந்த விஷமிகளின் இன்னொரு சொத்தை வாதம்,இவர்களை விட்டால் நாளை எல்லோரையும் விடச்சொல்லி போராட்டம் நடத்துவார்கள்.எல்லோரையும் விட வேண்டியிருக்கும் என்கிறார்கள்.எல்லோருக்கும் ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்து போராட மாட்டார்கள் என்பதை இவர்களுக்கு யாராவது சொன்னால் தேவலை.இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.அந்த அளவுக்கு இந்த வழக்கில் பல ஓட்டைகள உள்ளது.அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் ஒன்றினைந்து போராடினார்கள்.
நிலைமை இப்படி இருக்க இவர்கள்தான் ஏதோ நீதியை நிலைநாட்ட வந்தவர்கள் போலவும் மற்றவர்களெல்லாம் கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலவும் எழுதிவருகிறனர்.
இதைப்படிக்கும் நண்பர்கள் இந்த் விளக்கம் சரி என்றால் உங்கள் நண்பர்களிடம் பரப்புங்கள். இவை தவறு என்றால் சரியான உங்களின் கருத்துக்களோடு மறுப்பு எழுதிங்கள்.

முகவரி: ksrameshodc@gmail.com