Courtesy:www.warwithoutwitness.com

திருக்குறள் உங்கள் மொழியில் (Thirukural in Your Language)

Sunday, 13 July 2014


சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?

ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்

விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல

பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்

நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.

வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு

சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

திருகோணமலை

இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....

என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.


Thursday, 19 July 2012

ஆசீவகம்

ஆசீவகம் என்ற தமிழ் சித்தர்கள் வாழ்வியல்(மெய்யியல்) தான் பிறகு புத்தமாகவும், சமணம...

ஆசீவகம் என்ற தமிழ் சித்தர்கள் வாழ்வியல்(மெய்யியல்) தான் பிறகு புத்தமாகவும், சமணமாகவும் வடிவமெடுத்தன. 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழே அகில இந்தியாவிலும் பேசப்பட்ட மொழி.பாலியிலிருந்து தான் தமிழும், சமஸ்கிருதமும் வந்தது என்பது புத்த மத ஆரியனின் பிதற்றல்.புத்தத்தைப் பரப்ப உருவான புதிய மொழி தான் பாலி என்பது உண்மை.தமிழில் இருந்து திரிந்து மருவி இன்று வழக்கொழிந்து இறந்து போன மொழி தான் சமஸ்கிருதம்.


அனைத்துலக தமிழ் மையம்'s Photos
தமிழ் எழுத்து தோன்றிய காலம்.

மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்-றிய மொழி தமிழ். இன்றைய மொழிக் குடும்பங்களில் தலைசிறந்த எட்டுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். உலக மொழிகள் அனைத்-துமே தமிழ் மொழியிலி-ருந்துதான் தோன்றின என்பது மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் கருத்து.

இந்நிலையில் தமிழ் மொழி எழுத்து கி.பி. 6_7ஆம் நூற்றாண்டுகளில் தோன்-றியது என்றும் அது செம்மையுற்றது சோழர்காலத்தில் என்றும் அண்மையில் மய்ய சாகித்ய அகாதெமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற பேரா. எஸ். செத்தார் என்ற கன்னட அறிஞர் கூறி-யது இந்து ஆங்கில நாளேட்டில் (8.05.2009) வெளி வந்துள்ளது. ஒரு மொழி அறிஞர் பிறமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அறியாத பேராசிரியராக உள்ளது வியப்பாக உள்ளது. அதுவும் ‘சங்கம் தமிழகம்’ என்ற சங்கத்தமிழ் பற்றிக் கன்னட மொழி-யில் எழுதிய நூலுக்காக விருது பெற்றபின் இவ்வாறு கூறியிருப்பது விந்தையாக உள்ளது.

ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவரைக்கேட்டால் நம் ஊர் வையா-புரிப் பிள்ளையைத்தான் காட்டுவார். ‘தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்-டில் வாழ்ந்தவர் என்று அழுத்தம் திருத்தமாகக் (தமிழ்ச்சுடர் மணிகள், பக். 38) கூறியுள்ளார். ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்றுரைத்தான் ஒரு பேதை; (பாரதியார்) இந்தப் பேதையோ தொல்காப்பியர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

மேல் நாட்டுத் தமிழறிஞரான டாக்டர். கமில் சுவலபில் கூட வையா-புரியாரின் வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டுதான் ‘தமிழ் எழுத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகிறார். இருப்பினும் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் தீவிரமாக ஆராய்ந்து கி.மு. 100_க்கும் கி.பி. 250_க்கும் இடையில் தோன்றியது சங்க இலக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)”

தமிழ்எழுத்து வரிவடிவத்தைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார். பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (கி.மு. 3_ 1ஆம் நூ) தொல்- காப்பியம் (கி.மு. 2_1 ஆம் நூ) சங்க இலக்-கியம் (கி.மு. _ 1 ஆம் நூ) அரிக்கமேடு (கி.பி. 1_ 2 ஆம் நூ) பிற்காலத் தமிழ் பிராமி கல்-வெட்டுகள் (கி.பி. 3 _ 4 ஆம் நூ) இவ்வளவு காலகட்டங்களை ஆய்வு செய்யும் சுவலெபில் மொத்தத்தில் சங்க இலக்கிய நூல்களின் காலம் (கி.மு. 1_கி.பி. 4 ஆம் நூ) என்ற முடிவுக்கு வருகிறார்.

சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி (இயக்-குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்துவெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம் (2008) நூலில் சிந்து-வெளி முத்திரைகளைப்பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

“காட்டுமிராண்டிகளான ஆரியர் வருகைக்கு முன்னரே, இந்தியாவில் ஒரு தலை சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்-கியவர்கள் தமிழர்கள் என்பதும், அந்நாக-ரிகம் நிலவிய காலத்தே வழங்கப்பட்ட மொழி, எழுத்து பழந்தமிழ்க் குடும்-பத்தைச் சார்ந்தது என்பதும் அய்யத்-திற்கப்பாற்பட்ட உண்மைகளாகும். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும்.

பேரா. செத்தார் அசோகர் கண்டு-பிடித்த பிராமி எழுத்துகளுக்கு முன் தென்னிந்தியாவில் எந்த மொழிக்கும் எழுத்து கிடையாது என்கிறார். அசோகரின் பிராமியை முதலில் கன்னடமும் தெலுங்கும் ஏற்றுக் கொண்-டன. கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மொழி பிராமி வரிவடிவத்தை ஏற்றுக்கொண்டது என்கிறார் செத்தார். (The Tamil Script emerged during the pallava period) 6-7 Century and attained maturity under the cholas

பிராமி வடிவத்தைப்பற்றி முனைவர் வாவூசி குறிப்பிடுவது வருமாறு:

ஆரம்ப நிலையில் பிராமி எழுத்து வடிவானது பழந்தமிழ் மொழிகளில் மிகப் பழைமையான தமிழ் மொழிக்காக உருவாக்கப்பட்டது. இவ்வரிவடிவின் ஆரம்ப நிலையே ஹரப்பா நாகரிக மக்கள் தங்களுக்குள் எழுதி வந்த எழுத்து வடிவமாகும். இத்தகு பிராமி வடிவத்தைப் பிற்காலத்தில் ஆரியமல்லா மொழியான பிராகிருதம் பயன்படுத்திக் கொண்டதால், தமிழ் மொழி தனக்-கென, வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டது. பிராமி வரிவடிவமானது சிந்து நாகரிக எழுத்து வடிவத்திலிருந்து வளர்ந்ததைப் பேரா. வேங்கடன் தெளிவு-படுத்துகிறார். எனவே பழந்தமிழ் மொழிக்-காக உருவாக்கப்பட்ட பிராமியின் ஆரம்பகால வடிவங்கள்தான், ஹரப்பா நாகரிக முத்திரைகளில் காணப்படு-கின்றன என்பது மிகச் சரியானதாகும்.

அஸ்கோ பர்போலா போலந்து, சோவியத் ஆய்வாளர்கள், திரு அய்ரா-வதம் மகாதேவன், ஹீராஸ் பாதிரியார், போன்றோர் “ஹரப்பா நாகரிக எழுத்து வடிவங்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் முனைவர் வாவூசி.

உண்மை இவ்வாறிருக்க பேரா. செத்தார் தமிழ் மொழி பிராமி வடி-வத்தைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்-தான் முதல் முதல் பெற்றது என்று கூறி-யிருப்பது அவர் தம் மொழியறிவின்-மையைப் புலப்படுத்துகின்றது. இது- வேத-னைக்குரியதாகும்.

செத்தாரைப் போன்ற வேறு சில அறிஞர்கள் சிந்துவெளியில் காணப்-படும் முத்திரைகள் எழுத்து வடிவம் இல்லையென்ற கொள்கையைப் பரப்பி வருகின்றனர். ஃபார்மர் (கலிஃபோர்-னியா) விட்ஸெல் (யார்வேட் பல்கலைக்-கழகம்) என்பார் இக்கருத்தை வெளியிட, இதை மறுத்து அஸ்கோ பர்போலா (போலந்து) மெஸ்ஸிகோ விடேல் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

இவர்கள் அனைவருடைய கருத்து-களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘சிந்து-வெளி வரிவடிவங்கள் படிக்கக்கூடிய எழுத்துகளே என்றும், பெரும்பாலும் அவை திராவிட மொழியைச் சார்ந்-தவையே’என்றும் பேரா. முனைவர் அய்ராவதம் மகாதேவன் இந்து நாளிதழில் (மே 3, 2009) மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ஆணித்தரமான சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.

சிந்து வெளி முத்திரைகளிலுள்ளவை படிக்கக் கூடிய எழுத்துகளே. அவை பெரும்பாலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே.

அவை சிந்து சம வெளியில் பழக்கத்திலிருந்த திராவிட மொழியான பிராகுவி மொழியைச் சார்ந்தவையே.

ரிக்வேதத்தில் திராவிட மொழிச் சொற்கள் கடன் பெற்று சேர்க்கப்-பட்டுள்ளன.

பிராகிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளின் தொகுப்-புகள் (ஹன்டர், பர்லோ, மகாதேவன்) சிந்துவெளி முத்திரைகளில் காணப்-படும் மொழி திராவிட மொழி குடும்-பத்தைச் சார்ந்தவையே.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை யூரி வெலன்டினோவிச் (ரஷ்யா) வால்டர் ஃபேர் சர்விஸ் (அமெரிக்கா) போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு உலகளாவிய அளவில் தமிழ்மொழி சார்ந்த திராவிட மொழி எழுத்து வடிவத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற சூழ்நிலையில் கன்னடக் கிணற்றுத் தவளை தவறான கருத்தைத் தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியம் ‘வடுகர்’ என்று குறிப்பிடுவது (Vadugars are the inhabitants of present day Karnataka) கன்ன-டர்களையே என்று செத்தார் குறிப்பிட்-டுள்ளார். அதே சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107) (கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது. சங்ககால வடுகர்தான் ‘கல்லா நீண் மொழியினர்’ என்றால் 21 ஆம் நூற்றாண்டு வடுகரும் கல்லா நீண்மொழியர் தானோ-? அய்யத்திற்குரியதாக்கிவிட்டது செத்தாரின் கூற்று.

நன்றி: செந்தமிழ்செல்வி,

Tuesday, 3 January 2012

சித்த மருத்துவம்


சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.
சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)
சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.
நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

பொருளடக்கம்

வாதம் சம்பந்த பிணிகள்

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்தம் சம்பந்த பிணிகள்

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்துமம் சம்பந்த பிணிகள்

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது,
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்'
(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.)

பரிசோதனை

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

இதையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Wednesday, 28 December 2011

பழந்தமிழர் நேரக்கணக்கீடு (Units of time in ancient Tamil history )

 • 1 குழி (குற்றுழி)= 6.66 millisecond-the time taken by the Pleiades stars(aRumin) to glitter once.
 •  10 குழிகள் (குற்றுழிகள்)= 1 மை= 66.6666 millisecond-the time taken by the young human eyes to flap once.
 • 2 கண்ணிமைகள் = 1 கைநொடி= 0.125 second
 • 2 கைநொடிகள்= 1 மாத்திரை = 0.25 second
 • 6 மைகள் = 1 சிற்றுழி (நொடி)= 0.40 second-the time taken for a bubble (created by blowing air through a bamboo tube into a vessel 1 saaN high, full of water) to travel a distance of one saaN (சாண்).
 • 2 மாத்திரைகள் = 1 குறு = 0.50 second
 • 2 நொடிகள்= 1 வினாடி = 0.80 second-the time for the adult human heart to beat once
 • 212 நொடிகள்= 2 குறு = 1 உயிர் = 1 second
 • 5 நொடிகள்= 2 உயிர்= 1 சாணிகம் = 1/2 அணு = 2 seconds
 • 10 நொடிகள்= 1 அணு = 4 seconds
 • 6 அணுக்கள்= 12 சாணிகம் = 1 துளி = 1  நாழிகை வினாடி = 24 seconds
 • 10 துளிகள் = 1 கணம் = 4 minutes
 •  6 கணம் = 1 நாழிகை = 24 minutes
 • 10 நாழிகைகள் = 4  சாமம் = 1  சிறுபொழுது = 240 minutes= 4 hours
 •  6 சிறுபொழுதுகள் = 1 நாள் = 24 hours
 • 7 நாட்கள்= 1 கிழமை (1 week)
 • 15 நாட்கள்= 1 அழுவம் (1 fortnight )
 • 29.5 நாட்கள் = 1 திங்கள் (1 lunar month)
 • 2 திங்கள்= 1 பெரும்பொழுது (1 season)
 • 6 பெரும்பொழுதுகள் = 1 ஆண்டு (1 year)
 • 64 ஆண்டுகள் = 1 வட்டம் (1 cycle)
 • 4096(=8^4) ஆண்டுகள் = 1 ஊழி (1 epoch)

Tuesday, 20 December 2011

ஆனந்த விகடன்- தலையங்கம் : கவனம் தேவை - கேரளத்து யானையே..!

சட்டபூர்வமாக காய்கறியில் தொடங்கி, சட்ட விரோதமாக அடிமாடு வரையில் அத்தனைக்கும் தமிழ்நாட்டையே நம்பி இருக்கும்போதும், ஓர் இடைத்தேர்தலுக்காக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேவை இல்லாத பீதியையும் பதற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களைத் தமிழ்நாட்டின் எதிரிகளாக உசுப்பிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறது கேரளத்து அரசியல் கூட்டம்!

தமிழ்நாட்டில் இருந்து தங்கள் மாநிலத்துக்குள் வரும் பதின்மூன்று சாலைகளுமே தங்கள் அடிப்படை ஜீவாதாரத்துக்கான ரத்த நாளங்கள் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அத்தனை பாதைகளையும் தாங்களே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு, கண்றாவி அரசியல் அவர்களின் கண்களை மறைத்திருக்கிறது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகால் சோழன் எழுப்பிய கல்லணை இன்றைக்கும் காட்டி நிற்கும் கட்டுக்குலையாத கம்பீரம்தான், நூற்றுச் சொச்சம் வருடங்களுக்கு முன் வெளிநாட்டு பென்னி குயிக் இந்த அணையைக் கட்டுவதற்கான அஸ்திவாரம் என்பதை எத்தனை உரக்க எடுத்துச் சொன்னாலும், கேரளத்துச் சூழ்ச்சியாளர்களின் காதில் அது விழத்தான் செய்யாது. அப்படி விழுந்துவிட்டால், பிறகு எப்படி நடக்கும் அவர்களின் தரங்கெட்ட தேர்தல் பிழைப்பு?

ஓங்கி உயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பூகோளரீதியாகப் பிரித்தபோதும், எல்லையே இல்லாத அன்போடு தமிழ் மக்களுடன் ஒட்டி உறவாடும் மலையாள மக்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை மூலம், இல்லாத பொல்லாத விரிசலை உண்டாக்கி, மடுவை மலையாக்கிக் காட்டும் இந்தச்சூழ்ச்சியின் பின்னால் உள்ள சுயநலத்தை அவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

தண்ணீரால் தமிழனின் தாகம் தீருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், விவசாயிகளின் வாழ்க்கை சுபிட்சத்தைச் சகிக்க முடியாமல், பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதில் அற்ப சுகம் காண நினைத்தால்... அது கேரளத்து யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும்!

சிறுபுத்தித் தலைவர்களுக்கு வேண்டுமானால் அந்த அரசியல் அரிப்பு இருந்துவிட்டுப் போகட்டும். ஆதரவு காட்டும் தமிழகத்தோடு, அப்பாவி மக்களுக்கு வேண்டாம் பகை!

அதே சமயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்...

அதர்மமே என்றாலும், அதிலும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் கேரளத்துத் தலைவர்களிடம் இருந்து நீங்கள் இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தற்காலிகமாகவேனும் உங்கள் கட்சிப் பேதங்களை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, ஒருமித்த குரலோடு டெல்லியை முற்றுகை இடுங்கள். கேரளத்தை ஆள்வதும் காங்கிரஸ்தான் என்ற சுயநலத்தாலோ என்னவோ, மத்திய அரசு காட்டும் மௌனத்தைக் கலைக்கப் போராடுங்கள்!

ஏழு கோடி மக்களின் எழுச்சிக் குரலை நீங்கள் அங்கே ஒற்றுமையோடு எதிரொலிப்பதன் மூலம்தான், தூங்குவதுபோல் நடிக்கும் மத்திய அரசைத் 'தட்டி' எழுப்ப முடியும். தமிழனின் தர்ம யுத்தமும் அப்போதுதான் ஜெயிக்கும்!

Thursday, 8 December 2011

Wednesday, 7 December 2011

தமிழர் வரலாறு - கி.பி. 1 - கி.பி.- 1742

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53

ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105

சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107

ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175

வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200

கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)

மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.கி.பி.180

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200

இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275

வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300

மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700

தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700

தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358

துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400

மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419

பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535

தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632

முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631

சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900

வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610

நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644

சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.


தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்
படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645

அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650

திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788

ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800

இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825

சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850

மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900

குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900

இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000

உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000

சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000

பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000

துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137

தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024

முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040

சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150

வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197

நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60

ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272

மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296

அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300

கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1336

விஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1337

உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440

ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538

சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492

கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498

போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500

புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500

உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510

போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546

நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565

விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601

கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619

அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680

மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

கி.பி. 1677

விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706

இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700

உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.

கி.பி. 1705-1742

தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

External Links
1- http://www.aruvams.com/2011/07/14.html
2- http://www.tamilkalanjiyam.com/tamil_world/thamizhar_history/thamizhar_history.html